கோவா அமைச்சர் அலெக்ஸோ செக்வேரா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், உடல்நலக் காரணங்களுக்காக ராஜினாமா செய்யவில்லை என்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாகவும் தெரிவித்தார்.
நவம்பர் 2023-இல் பிரமோத் சாவந்த் தலைமையிலான அமைச்சரவையில் இணைந்து பணியாற்றி வந்த நிலையில், தனது பதவிக் காலத்தில் முதலமைச்சரிடமிருந்து முழு ஆதரவைப் பெற்றதாக கூறினார்.
நன்றி: பிடிஐ