கோவாவில் நடந்த 'அயர்ன்மேன் ' போட்டியில் தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை, நீச்சல், ஓட்டம், சைக்கிள் போட்டிகளில் கலந்துகொண்டார். இந்த 'அயர்ன்மேன்' டிரையத்லானை பாஜ நிர்வாகிகள் அண்ணாமலை மற்றும் தேஜஸ்வி சூர்யா ஆகியோர் வெற்றிகரமாக முடித்தனர். முன்னதாக, “கோவாவில் இன்று நடைபெற்ற அயர்ன்மேன் 70.3 போன்ற நிகழ்வுகளில் நமது இளைஞர்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்” என அண்ணாமலைக்கு, பிரதமர் மோடி வாழ்த்து கூறினார்.
நன்றி: மாலைமலர்