கோவா - டெல்லி இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்

கோவாவிலிருந்து 229 பயணிகளுடன் டெல்லிக்குச் சென்ற இண்டிகோ விமானம் (6E 2102), என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்று காலை கோவா சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதால், விமானிகள் உடனடியாக விமானத்தைத் திருப்பி பாதுகாப்பாக தரையிறக்கினர். விமானம் தற்போது பராமரிப்புச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. தேவையான அனுமதிகள் கிடைத்தவுடன் மீண்டும் இயக்கப்படும் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி