கற்றாழை ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல.. அழகை மேம்படுத்துவதிலும் சிறப்பாக செயல்படுகிறது. இது ஈரப்பதத்தை அதிகரிக்கும் பண்புகளைத் தவிர பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. கற்றாழை கூழுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும். இது உங்கள் முகத்திற்கு நல்ல பொலிவை தரும். வறண்ட சருமம் உள்ளவர்கள் கற்றாழை மற்றும் ஆலிவ் எண்ணெயை சம அளவு கலந்து இரவில் தடவி வந்தால் காலை வரை நல்ல பொலிவு ஏற்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.