சென்னையில் கிளாண்டர்ஸ் தொற்று உறுதி.. குதிரை பலி

சென்னையில் 'கிளாண்டர்ஸ்' பாக்டீரியா தொற்று உறுதி செய்யப்பட்ட குதிரை ஒன்று உயிரிழந்துள்ளது. இந்த நோய் குதிரைகளிடம் இருந்து மனிதர்களுக்கும் பரவக்கூடியது என்பதால், கால்நடைப் பராமரிப்புத்துறை கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட குதிரையுடன் இருந்த மற்ற குதிரைகளைத் தனிமைப்படுத்தி தீவிரமாகக் கண்காணிக்கும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி