கவர்ச்சி அரசியல் என்பது நீர்க்குமிழி போன்றது என்றும், அது எந்த நேரத்திலும் உடைந்து சிதறிவிடும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கொள்கையாலும் தியாகத்தாலும் கட்டமைக்கப்பட்ட அதிமுக காலத்தால் அழிக்க முடியாத மாபெரும் மக்கள் பேரியக்கம் எனக் குறிப்பிட்ட அவர், குதிரை பேர அரசியலின் மூலம் ஆட்சியமைத்தவர்கள் ஜனநாயக மாண்புகளைப் படுகுழியில் தள்ளி ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்துவிட்டதாகக் கடுமையாகச் சாடியுள்ளார்.