தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும் வழக்கம். தற்போதுள்ள நிர்வாகிகளுக்கான பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிவடையும் நிலையில் 2026-29 ஆண்டுகளுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல், இன்று (பிப்.22) சென்னை அண்ணா நகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தயாரிப்பாளர் GKM தமிழ்குமரன் 788 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.