அரசியல் என்பது ஒரு படத்தின் மூலமாக தீர்மானிக்கப்படுவது அல்ல என முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மேலும், "புதுசா ஒருத்தருக்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என பிங்கி, பாங்கி போட்டு பார்க்கும் தேர்தல் அல்ல இந்த தேர்தல். திமுகவை அகற்ற வேண்டும் என முடிவு செய்தபிறகு, ஆட்சியில் யார் வந்து அமர்ந்தால் அவர்களுக்கு ஆட்சி கொடுக்க தெரியும் என்பதை சிந்திக்க வேண்டும்" என கூறியுள்ளார்.