சிறுமிகள் பாம்பு கடித்து மரணம்.. உறுதி செய்த மருத்துவர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூக்கனூர் கிராமத்தில் இன்று காலை இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. முதலில் தேவதர்ஷினி மற்றும் தேவஜனனி ஆகியோரின் உடலில் பாம்பு கடித்ததற்கான தடயங்கள் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தற்போது நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில், இரு குழந்தைகளும் பாம்பு கடித்ததாலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕