உத்தரப் பிரதேச மாநிலத்தில், வீட்டில் யாரும் இல்லாத நேரம்பார்த்து பெண் ஒருவர் தனது காதலனை வீட்டிற்கு அழைத்துள்ளார். காதலன் சென்ற நேரத்தில், திடீரென பெண்ணின் குடும்பத்தார் கதவை தட்டியதால், செய்வதறியாமல் காதலனை தனது அறையில் உள்ள இரும்புப் பெட்டியில் வைத்து காதலி பூட்டியுள்ளார். உள்ளே மூச்சு திணறி காதலன் கத்தவே, பெட்டிக்குள் என்ன சத்தமென திறந்து பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். கையோடு அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.