பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்: 2026-27 நிதியாண்டுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு அரசின் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 2026-27-ம் நிதியாண்டுக்கான புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி, ஒரு பெண் குழந்தை உள்ள குடும்பத்திற்கு ரூ.50,000-மும், இரு பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.25,000-மும் வைப்புத்தொகையாக வழங்கப்படுகிறது. தகுதியுள்ள பயனாளிகள், குழந்தையின் பிறப்பு சான்றிதழ், வருமான சான்று, ரேஷன் கார்டு மற்றும் ஆண் வாரிசு இன்மை சான்று போன்ற உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி