ராஜஸ்தானில் 15 வயது சிறுமி ஒருவர் இளைஞரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் இருதரப்பும் சமரசம் செய்து கொண்டனர். இதையடுத்து தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற இளைஞரின் கோரிக்கையை உயர் நீதிமன்றம் ஏற்றது. இந்த நிலையில் இரு தரப்பும் சமரசம் ஆனதால் மட்டும் வழக்கை ரத்து செய்ய முடியாது என தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.