நீலகிரி மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், ஒரு சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. குன்னூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்துவரும் காற்றுடன் கூடிய கனமழையால் மஞ்சூர் சாலையில், ராட்சத மரம் ஒன்று அவ்வழியாக சென்ற பிக்கப் வாகனத்தின் மீது விழுந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுனார். இது குறித்து தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.