தாய்லாந்தில் சுமார் 113 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த 'நாகடைட்டன் சையஃபுமென்சிஸ்' என்ற புதிய ராட்சத டைனோசர் இனம் கண்டறியப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரியதான இந்த சௌரோபாட் வகை டைனோசர், 90 அடி நீளமும் 28 டன் எடையும் கொண்ட தாவர உண்ணியாகும். வடகிழக்கு சையஃபுன் மாகாணத்தில் கண்டெடுக்கப்பட்ட இதன் எலும்புகள், இது நீண்ட கழுத்துடன் மரங்களின் இலைகளை மேய்ந்து வாழ்ந்ததை உறுதிபடுத்தியுள்ளன.