மியான்மரின் மொகோக் பகுதியில் 2.2 கிலோ எடையுள்ள அபூர்வ மாணிக்கக் கல்லைச் சுரங்கத் தொழிலாளர்கள் கண்டெடுத்துள்ளனர். ஊதா கலந்த சிவப்பு நிறத்தில், அதிக ஒளியைப் பிரதிபலிக்கும் தன்மையுடன் உள்ள இது, ஆசியாவின் மிகப்பெரிய ரத்தினங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு பல மில்லியன் டாலர்களைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 90% உலக மாணிக்க வர்த்தகத்தைக் கொண்டுள்ள மியான்மருக்கு இது பெரும் வரப்பிரசாதமாகும்.