இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஏற்பாடு செய்த மார்கழியில் மக்களிசை என்ற மேடை நிகழ்ச்சியில் கானா பாடகி இசைவாணி, ஐயப்ப சாமி குறித்து இழிவுபடுத்தும் விதமாக பாடல் பாடியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பா. ரஞ்சித் மற்றும் இசைவாணி ஆகியோர் மீது ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தனக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுப்பதாக இசைவாணி தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நன்றி: பாலிமர்