குறைந்த பீரிமியத்தில் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை PhonePe அறிமுகப்படுத்தவுள்ளது. ஆண்டுக்கு ரூ.59 செலுத்தினால் 10-க்கும் மேற்பட்ட நோய்களுக்கான மருத்துவச் செலவுகளுக்கு ரூ.1 லட்சம் வரை கவரேஜ் வழங்குகிறது. இந்த திட்டம் மூலம் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா மற்றும் பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை மேற்கொள்ள முடியும். நோய் கண்டறிதல் முதல் ICU செலவு வரை இந்த மருத்துவ காப்பீட்டு செல்லுபடியாகும் என கூறப்பட்டுள்ளது.