தமிழ்நாடு, புதுச்சேரியில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. தமிழ்நாட்டில் 91.39 சதவிகிதம் மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில், விருதாச்சலம் அருகே செம்பேரி கிராமத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவருவதற்குள் தோல்வி பயத்தில் மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால், அம்மாணவன் தேர்வு முடிவில் 221 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.