போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக இஸ்ரேல் அறிவித்ததை அடுத்து, தெற்கு காசாவில் தஞ்சமடைந்திருந்த பாலஸ்தீன மக்கள் வடக்குப் பகுதியை நோக்கிச் செல்ல தொடங்கினர். ஒப்பந்தத்தின் படி, இஸ்ரேலிய வீரர்கள் காசாவின் மத்திய பகுதியை விட்டு வெளியேறுகின்றனர். பணயக்கைதிகளை வருகிற அக்.13ஆம் தேதிக்குள் ஹமாஸ் விடுவிக்கும் எனக் கூறப்படுகிறது. அமெரிக்க அதிரபர் டொனால்டு டிரம்ப் 20 அம்ச திட்டங்களை பரிந்துரைத்து போர் நிறுத்த முயற்சியை மேற்கொண்டார்.