அமெரிக்க செனட் தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக தற்பாலின ஈர்ப்பாளரான ஜனநாயக கட்சியின் கிறிஸ் பாபாஸ், குடியரசு கட்சி வேட்பாளரை 85,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று சாதனை வெற்றியை பெற்றுள்ளார். LGBTQ+ சமூகத்தின் திருமணம் மற்றும் சமத்துவ உரிமைகளுக்காக தொடர்ச்சியாக போராடி வந்த இவர், தனது வெற்றிக்கு பின் அமெரிக்க மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்துவதே முதன்மை இலக்கு என தெரிவித்துள்ளார். மேலும், பெண்களின் கருத்தரிப்பு சுதந்திரத்தை மீட்பதிலும் செயல்படப்போவதாக அவர் உறுதியளித்துள்ளார்.