நெல்லை ஐ.டி. பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கில் கைதான போலீஸ் எஸ்.ஐ. சரவணன்-க்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது. கோவையில் தங்கியிருந்து, தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சுஜித், அவரது பெற்றோர் சரவணன் - கிருஷ்ண குமாரி மற்றும் உறவினர் ஜெயபால் ஆகியோர் உட்பட நால்வர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.