மாதந்தோறும் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் கேஸ் சிலிண்டர் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அந்த வகையில், இன்று (ஆகஸ்ட் 1) சென்னையில் 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.868.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ. 34.50 காசுகள் குறைந்து, ரூ.1,789க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.