கேஸ் சிலிண்டர் விலை ரூ.317 குறைய வாய்ப்பு.. மத்திய அரசு திட்டம்

அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக எரிவாயு தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு நிலவி வரும் சூழலில், இந்தியாவில் எரிவாயு விலை குறைய வாய்ப்புள்ளது. வர்த்தக மற்றும் தொழில்துறை சபை (CTI) பிரதமர் மோடிக்கு எரிவாயு மீதான வரியைக் குறைக்கக் கோரி கடிதம் எழுதியுள்ளது. இந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டால், வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.43 குறைந்து ரூ.869.52 ஆகவும், வணிக சிலிண்டர் விலை ரூ.317 குறைந்து ரூ.1,761.44 ஆகவும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சாமானிய மக்கள் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி