உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் பகுதியில் ரீசார்ஜ் செய்த போதிலும் 5ஜி நெட்வொர்க் சரியாக கிடைக்கவில்லை என கூறி, ஜியோ நிறுவன ஊழியரை அங்குள்ள மொபைல் டவரில் கட்டி வைத்த நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். செல்போன் நெட்வொர்க் கிடைக்காத ஆத்திரத்தில் அந்த ஊழியரை கட்டி வைத்து அச்சுறுத்திய வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.