டெல்லியின் லக்ஷ்மி நகரில் ராஜேஷ் கர்க் என்பவருக்கு சொந்தமான ஜிம்மை, அதில் வேலை செய்த சதீஸ் யாதவ் கைப்பற்ற முயற்சித்துள்ளார். இதில் ஏற்பட்ட மோதலால் ராஜேஷ் கொடூரமாக தாக்கப்பட்டார். அவரது மனைவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. மேலும் அவர்களது மகன் நடுரோட்டில் நிர்வாணமாக தாக்கப்பட்டார். ஜன.2ஆம் தேதி நடந்த இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகளையும் அவர்கள் மீட்டுள்ளனர்.
நன்றி: sirajnoorani