தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்ணை காரில் அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டில் தவெகவைச் சேர்ந்த இரு நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்டதாக கூறப்படும் பாலமுருகன் மற்றும் ஜெயபால் ஆகியோரை ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரும் நீதிமன்ற உத்தரவின் பேரில் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.