கூட்டு பாலியல் வன்கொடுமை.. பெண்ணின் உடல்நிலை குறித்து தகவல்

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண் நலமுடன் உள்ளதாக கோவை அரசு தலைமை மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி தெரிவித்துள்ளார். அவருக்கு தேவையான மனரீதியான கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருவதாகவும், பெண்ணின் நண்பருக்கு தலையில் 28 தையல் போடப்பட்டு சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிவித்தார். குற்றவாளிகளை பிடிக்கச் சென்றபோது காயமடைந்த தலைமை காவலர் சந்திரசேகரும், சுட்டு பிடிக்கப்பட்ட குற்றவாளிகள் குணா, கார்த்தி, சதீஷ் ஆகியோரும் தற்போது சிகிச்சையில் இருப்பதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி