கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியத் திரைப்பட விழாவில் தேர்வான 'காந்தி டாக்ஸ்' திரைப்படம், சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜனவரி 30 அன்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. வசனங்களே இல்லாத காட்சிகளாக இருந்தாலும் ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை ரசிகர்களைக் கவர்ந்தது. ஜீ ஸ்டீடியோஸ், கையோரிஸ், பின்க்மூன் அன்ட் மூவிமில் இணைந்து தயாரித்துள்ள இந்தத் திரைப்படம், வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.