ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரியுங்கள்..!

எப்படியாவது உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று முயற்சிப்பவர்களுக்கு மத்தியில், என்ன சாப்பிட்டாலும் உடல் எடை கூடவில்லை என்று குறை கூறுபவர்களும் உண்டு. உடல் எடையை அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். அவகோடா, உருளைக்கிழங்கு, உளுந்து, வேர்க்கடலை, முட்டை, மீன், ஆட்டிறைச்சி ஈரல், வாழைப்பழம், பேரீட்சை, பால், பாதாம், தானியங்கள், கேரட், மாதுளை, அத்திப்பழம் உள்ளிட்டவற்றை அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும். மேலும், தண்ணீர் 1-2 லிட்டர் வரை பருக வேண்டும். உடற்பயிற்சி செய்வது, யோகா, மூச்சுப்பயிற்சியும் பலனளிக்கும்.