ஈரானின் மறைந்த முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் உடல் அவரது சொந்த ஊரான மஷாத் நகரில் இன்று (ஜூலை.9) அடக்கம் செய்யப்படுகிறது. அவரது விருப்பத்தின்படி, 'இமாம் ரெசா' வளாகத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது. கமேனியின் மகள், மருமகன், பேத்தி மற்றும் அவரது மகன் மொஜ்தாபாவின் மனைவி ஜஹ்ரா ஆகியோரின் உடல்களும் அவருடன் சேர்த்தே அடக்கம் செய்யப்படவுள்ளன. இந்நிலையில், கமேனியின் இறுதி ஊர்வலம் தற்போது தொடங்கியது. இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.
நன்றி: நியூஸ்18