கரூர் விவகாரம் தொடர்பான வழக்கில் தலைமறைவாக உள்ள பொதுச்செயலாளார் புஸ்ஸி ஆனந்த், வெளியே வர இருப்பதாக கொள்கைப்பரப்பு பொதுச்செயலாளர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார். இன்று (அக்.13) தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த அவர், “கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் சந்திக்க இருக்கிறார். தலைமறைவாக இருக்கும் புஸ்ஸி ஆனந்த், இன்று வெளியே வருவார், மக்களைச் சந்திப்பார்” என்றார். முன்னதாக, தலைமறைவாக இருந்த நிர்மல் குமார், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
நன்றி: PT