எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் அவரது அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். அதேபோல், மறைந்த முதல்வர்களான ஜானகி மற்றும் ஜெயலலிதா ஆகியோரது அமைச்சரவைகளிலும் அமைச்சராக இருந்தார். அரசியல் களத்தில் மட்டுமல்ல திரையுலகிலும் தனி முத்திரை பதித்தவர் ஆர்.எம்.வீரப்பன். எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ், சத்யா மூவீஸ் மூலம் 'நாடோடி மன்னன்', 'அடிமைப் பெண்', 'உலகம் சுற்றும் வாலிபன்', 'பாட்ஷா' போன்ற பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளார்.