சென்னை கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் பிப்ரவரி 20-ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் இம்முகாமில், 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை அனைவரும் கலந்துகொண்டு நேரடி பணி நியமனம் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தகுதியுள்ள இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துவிட்டு, உரிய ஆவணங்களுடன் பங்கேற்கலாம்.