இஸ்ரேலும், ஈரானும் 30 ஆண்டுகளாக நட்புறவை கொண்டிருந்தன. மேலும் ஈரான் இஸ்ரேலை அங்கீகரித்தது. 1979-ம் ஆண்டு இஸ்லாமிய புரட்சிக்கு பின் பதவியேற்ற ஆயத்துல்லா கொமேனி தலைமையிலான அரசு, இஸ்ரேலுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்து அதன் தூதரகத்தை மூடியது. அந்த தூதரகத்தை பாலஸ்தீன விடுதலை அமைப்பிடம் ஈரான் ஒப்படைத்ததே, இன்று வரை இரு நாடுகளுக்கும் இடையே நீடிக்கும் பகைக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.