பிரான்ஸ் அதிபர் மேக்ரான் நாளை இந்தியா வருகிறார்

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், அவரது மனைவி பிரகிட் மேக்ரான் ஆகியோர் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக நாளை (பிப்., 16) இந்தியா வருகின்றனர். பிப்ரவரி 17ஆம் தேதி மும்பையில் தனது பயணத்தைத் தொடங்கும் அதிபர் மேக்ரான், பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து இந்தியா-பிரான்ஸ் Year of Innovation-ஐ தொடங்கி வைக்கிறார். வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு போன்ற முக்கிய துறைகளில் இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

தொடர்புடைய செய்தி