பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் சபலென்காவை வீழ்த்தி கோகோ காஃப் சாம்பியன் பட்டம் வென்றார். நம்பர் ஒன் வீராங்கனையான பெலாரசின் சபலென்காவும், 2ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காஃபும் பலப்பரீட்சை நடத்தினர். பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்ற ஆட்டத்தில் கோகோ காஃப், 6-7, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். கோகோ காஃப் பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வது இதுவே முதல் முறையாகும்.