ஜார்கண்ட் மாநிலம் சாஹிப்கஞ்ச் மாவட்டத்தின் பர்ஹர்வா ரயில்வே யார்டில், கற்கள் ஏற்றி வந்த ஒரு சரக்கு ரயில், அங்கு நின்றிருந்த மற்றொரு சரக்கு ரயிலுடன் மோதியது. இந்த விபத்தில் 18 ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. இதையடுத்து, மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகி வருகிறது.