16 ஆண்டுகளுக்கு பின் சரக்கு ரயில் கட்டணத்தை உயர்த்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், டசரக்கு ரயில் கட்டண உயர்வு வரும் ஆகஸ்ட் 15 முதல் அமலுக்கு வர உள்ளது. என்ஜின் கட்டணம் 11% முதல் 12% வரை உயர்த்தப்பட உள்ளது. மேலும், பாதை மாற்ற கட்டணமும் அதிகரிக்கிறதுட என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு மக்களை நேரடியாக பாதிக்காது என்றாலும், சில பொருட்களில் அதன் தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.