சுதந்திரப்போராட்ட வீரர் காந்தியவாதி வன்னிக்காளை காலமானார்

திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தை அடுத்த சத்திரப்பட்டியைச் சேர்ந்த காந்தியவாதியும், காந்தி சேவா சங்கத்தின் நிறுவனருமான மா.வன்னிக்காளை (92) உடல் நலக்குறைவால் (ஜன., 8) காலமானார். சுதந்திரப் போராட்டத் தியாகிகளிடம் பயிற்சி பெற்ற இவர், சத்திரப்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் சர்வோதயப் பணிகளை மேற்கொண்டார். இவரது பணிக்காக குடியரசுத் தலைவர் விருது, தமிழக ஆளுநர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். இவரது இறுதிச் சடங்குகள் கோபாலபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் நேற்று (ஜன., 09) நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி