பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 29 முதல் இலவச சீருடைகள்!

அரசுப்பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு விலையில்லா சீருடைகள் வரும் ஜுலை 29 முதல் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நடப்பு கல்வியாண்டில் 1-8ஆம் வகுப்பு வரை சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு சீருடை வழங்குவதற்கான அளவெடுக்கும் பணிகள் முடிந்துள்ளன. தைக்கப்பட்டுள்ள சீருடைகள் திங்கள்கிழமை முதல் வழங்கப்படும். மாணவர்களுக்கு சரியான அளவுள்ள சீருடைகள் வழங்கப்படுவதை தலைமை ஆசிரியர் உறுதிபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி