மினி பேருந்துகளிலும் கட்டணமில்லா பயணம் அறிமுகப்படுத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. “இதுகுறித்து முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு, பின்னர் முடிவு எடுக்கப்படும்” என போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். இன்று (அக்.02) அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணத் திட்டம் தொடங்கிய நிலையில், மினி பேருந்துகளுக்கும் இந்தச் சலுகையை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.