‘தீபாவளிக்கு இலவச கேஸ் சிலிண்டர்’.. டெல்லி முதலமைச்சர் அறிவிப்பு

டெல்லியில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது, ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகைகளுக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதனை நிறைவேற்றும் விதமாக தற்போது இதற்கான அறிவிப்பை வெளியிட்டு, ரூ.242 கோடியை டெல்லி அரசு ஒதுக்கியுள்ளது. “பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்படும். சிலிண்டருக்கான தொகை ரூ.853 அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்” என டெல்லி  முதலமைச்சர் ரேகா குப்தா அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி