இலவச உணவு தானிய திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 2024-25ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் அவர், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளை முன்னிறுத்தி நமது பட்ஜெட் கொள்கைகள் அமைந்துள்ளது என்றார். இலவச உணவு தானிய திட்டம் மூலம், ஏழை குடும்பங்கள் 5 கிலோ உணவு தானியமும் அந்தியோதயா அட்டைதாரர்கள் 35 கிலோ உணவு தானியமும் மாதந்தோறும் இலவசமாகப் பெறுவார்கள்.