200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்குச் சரியாகச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். தலைமைச் செயலக உயர்நிலை கூட்டத்தில், தொழில் மற்றும் விவசாய உற்பத்தியைப் பெருக்க விவசாயிகளுக்குத் தடையில்லா மின்சாரம் வழங்கவும், வரும் பருவமழைக் காலத்திலும் எவ்வித பாதிப்பும் இன்றி மின் விநியோகம் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.