கோவையில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து பிரபலமான கமலாத்தாள் பாட்டிக்கு, கடந்த 2 மாதங்களாகத் தட்டுப்பாடு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் மீண்டும் வழங்கப்பட்டது. சிலிண்டர் கேட்டு அவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்த நிலையில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமாரின் உடனடி அறிவுறுத்தலின் பேரில் அவருக்கு மீண்டும் சிலிண்டர் வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.