தமிழ்நாடு முழுவதும் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவ.14) சிவகங்கையில் தொடங்கி வைத்தார். 2025-2026 கல்வியாண்டில் 5,34,017 மாணவ, மாணவியருக்கு 241 கோடி ரூபாய் செலவில் மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் 22 லட்சம் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் 11,449 மாணவர்களுக்கு 5.18 கோடி ரூபாய் செலவில் மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன.