ஆதார் இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு ஜூன் 2027 வரை நீட்டிப்பு

மத்திய அரசு, ஆதார் அட்டைதாரர்கள் தங்களின் அடையாளம், முகவரி ஆவணங்களை 'myAadhaar' இணையதளம் வழியாக இலவசமாக ஆன்லைனில் புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை மேலும் ஒரு முழு ஆண்டிற்கு நீட்டித்துள்ளது. கடந்த 13ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையின்படி, பொதுமக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இந்த இலவச சேவை வரும் ஜூன் 14, 2027 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் எந்தவித கட்டணமும் இன்றி தங்களின் விவரங்களை ஆன்லைனில் எளிதாகப் புதுப்பித்துக் கொள்ள முடியும்.

தொடர்புடைய செய்தி