எஃப்கியூஎல் (FQL) நிதி மோசடி விவகாரத்தில் பொதுநல வழக்கு தேவையில்லை என்று அரசு கருதினால், நீதிமன்றமே தாமாக முன்வந்து விசாரிக்க நேரிடும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரித்துள்ளது. மனுதாரர் பாதிக்கப்பட்ட நபர் என்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் வாதத்தை ஏற்க நீதிபதிகள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.