தென்கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக்யோலுக்கு ஆயுள் தண்டனை

தென்கொரியாவில் 2024-ம் ஆண்டு ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பதாக கூறி ராணுவ சட்டத்தை பிரகடனப்படுத்திய அப்போதைய அதிபர் யூன் சுக்யோல், பொதுமக்கள் எதிர்ப்பால் அதை திரும்ப பெற்றார். கிளர்ச்சியை தூண்டியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடந்தது. நீதிபதி ஜீ ஜுய்-யோன், யூன் சுக் யோல் சட்டவிரோத முயற்சியில் ராணுவம் மற்றும் போலீஸ் படைகளை திரட்டி கிளர்ச்சியில் ஈடுபட்டதாக கூறி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். பிற குற்றச்சாட்டுகளுக்காக அவருக்கு ஏற்கனவே 5 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி