அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி மீண்டும் கட்சியில் இணையப்போவதாக பரவிய தகவல்களுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக தலைமை தன்னிடம் இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என தெரிவித்தார். அதே நேரத்தில், கட்சியை பலப்படுத்தும் நோக்கில் தலைமை பேசும் என எதிர்பார்ப்பதாக கூறினார். சிதறிக்கிடக்கும் அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என கூறினார்.